Arulmiku Nilayadatshi Sametha Gayaroganeswarar Temple, Nagapattinam

611003, Melakottaivasal, Nagapattinam, Tamil Nadu, India
About

Arulmiku Nilayadatshi Sametha Gayaroganeswarar Temple, Nagapattinam is a hindu temple located in Nagapattinam, Tamil Nadu. The average rating of this place is 4.90 out of 5 stars based on 8 reviews. The street address of this place is 611003, Melakottaivasal, Nagapattinam, Tamil Nadu, India. It is about 0.06 kilometers away from the Nagappattina railway station.

Photos
FAQs
Where is Arulmiku Nilayadatshi Sametha Gayaroganeswarar Temple, Nagapattinam located?
Arulmiku Nilayadatshi Sametha Gayaroganeswarar Temple, Nagapattinam is located at 611003, Melakottaivasal, Nagapattinam, Tamil Nadu, India.
What is the contact number for Arulmiku Nilayadatshi Sametha Gayaroganeswarar Temple, Nagapattinam?
The contact number for Arulmiku Nilayadatshi Sametha Gayaroganeswarar Temple, Nagapattinam is +91 4365 242 844
What is the nearest railway station from Arulmiku Nilayadatshi Sametha Gayaroganeswarar Temple, Nagapattinam?
Nagappattina railway station is the nearest railway station to Arulmiku Nilayadatshi Sametha Gayaroganeswarar Temple, Nagapattinam. It is nearly 0.06 kilometers away from it.
What people say about Arulmiku Nilayadatshi Sametha Gayaroganeswarar Temple, Nagapattinam

Prasad RR 22 months ago

Nice & clean Temple

து.பழனிவேலு 22 months ago

தினம் ஒரு திருதலம் வரிசையில் இன்று நாம் பார்க்கும் திருத்தலம் காவிரி தென்கரை தலங்களில் 82- வது
தலமாக விளங்கும்: திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) ஆதி புராணம் என பல்வேறு பெயர்களைக் கொண்ட திருத்தலம். உப்பனாறு கரையில் இக்கோயில் 3.50 ஏக்கர் நிலப் பரப்பளவில் கிழக்கு நோக்கி இரண்டு பிரகாரங்களுடன் விளங்கும் ஒரு ஆலயம். இறைவர் நிலாயதாக்ஷினி அம்மை உடனமர் காயாரோகணேஸ்வரர். ஆலய தீர்த்தம் தேவ தீர்த்தம் இருக்கிறது . தல விருட்சமாக மாமரம். அட்ட நாகங்களில் ஆதிசேஷனும் பூஜித்த தலம் ஆதலால் இப்பெயர் பெற்றது என தல புராணம் கூறுகிறது. புண்டரீக முனிவரை இறைவன் திருமேனியோடு ஆரோகணம் செய்த சிறப்புடையது இத்தலம். சப்தவிடங்கத் தலங்களில் இத்தலமும் ஒன்றாக விளங்குகிறது. மற்றும் 64 சக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்கிறது. இவ்வூரில் சிவன் கோவில் என்று கேட்டால் பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள அகத்தியர் பூஜித்த கோவிலை கூறுவார்கள். எனவே நீலாதாட்ச்சாயினி அம்மன் கோயில் என்று கேட்டு தான் பாடல் பெற்ற தலத்தை அடைய முடியும். கையிலாயம் மற்றும் காசியை போல் இத்தலம் முக்தி மண்டபத்தைக் பெற்றுள்ளது. அதிபத்த நாயனார் அவதரித்த பெருமை உடையது இத்தலம். மற்றும் முற்றி முக்தி பெற்ற தலமும் ஆகும். ஆவணியில் அதிபத்த நாயனார் விழா இன்றளவும் நடைபெறுகிறது. சப்த முனிவர்களுக்கு இறைவன் மூல லிங்கத்தில் இருந்து தோன்றி சோமாஸ்கந்தராக காட்சி கொடுத்து அருளிய திருத்தலம். தசரதன் சனி பகவானை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம். அம்பிகை முருகன் திருமால் அகத்தியர் வசிஷ்டர் முசுகுந்தன் அழகியகேசரி விசித்திர சந்திரசேகரன் முதலியோர் வழிபட்டு அருள் பெற்ற தலம். மூவர் பாடல் பெற்ற திருத்தலம். மற்றும் இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை குறித்து அருணகிரிநாதரும் திருப்புகழில் பாடியுள்ளார். காவிரி தென்கரை திருப்புகழ் தலங்களில் இது 52வது தலமாக இத்தலம் விளங்குகிறது. தலத்தில் மூன்று திருப்புகழ் பதிகங்கள் அருளப் பெற்று உள்ளன. இத் தல புராணத்தை 61 படலங்கள் கொண்டு 2506 பாடல்கள் கொண்ட இந்நூலை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களால் ஏற்றப்பட்டுள்ளது. இக்கோயில் கல்வெட்டுக்கள் உள்ளன. ஆறுகால பூஜை நடைபெறுகிறது. மேலும் இவ்வூரில் நாகநாதர் கோயில் அழகிய நாதர் கோயில் அமரநந்தீஸ்வரர் கோயில் கைலாசநாதர் கோயில் விசுவநாதர் கோயில் மேலைக்காயாரோகணர் கோயில் என்று ஏனைய சிவாலயங்களில் உள்ள அற்புத திரு ஊரேயாகும். சிவாயநம திருச்சிற்றம்பலம் ஆரூரா தியாகேசா.

Murugan Sivananantha Perumal 58 months ago

நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் ஆலயம்

நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

நாகப்பட்டினத்தின் புராண காலப்பெயர், ‘கடல் நாகைக் காரோணம்’ என்பதாகும். இத்தல ஈசனின் திருநாமம் ‘காயாரோகணேஸ்வரர்’. அன்னையின் திருநாமம் ‘நீலாயதாட்சி’ என்னும் ‘கருந்தடங்கண்ணி’. ‘காயம்’ என்றால் ‘உடம்பு’ என்று பொருள்படும். ‘ஆரோகணம்’ என்பதற்கு ‘உடம்போடு சேர்த்து அணைத்துக் கொள்ளல்’ என்று அர்த்தம். இங்குள்ள ஈசன், புண்டரீக மகரிஷியின் உடலை, தன் சிவலிங்கத் திருமேனியோடு சேர்த்துக் கொண்டதால், இத்தல இறைவனுக்கு ‘காயாரோகணர்’ என்றும், இத்தலத்திற்கு ‘காயாரோகணம்’ என்றும் பெயர் வந்தது.

வழிபாட்டு பலன்

இவ்வாலயத்தில் உள்ள அகோர வீரபத்திரரை, பவுர்ணமி நாளில் வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் வறுமை அகலும். இத்தல வெண்ணெய்பிரான், காசி விஸ்வநாதர், அருணாசலேஸ்வரர் சன்னிதிகள் இரட்டிப்பு பலன்களை அளிக்கவல்லவை. இங்குள்ள பைரவரை வெள்ளி மற்றும் அஷ்டமி நாட்களில் முந்திரி மாலை அணிவித்து வில்வ அர்ச்சனை செய்து, நறுமண மலர்மாலை சூட்டி 9 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் கிரக தோஷங்கள் அகலும். இங்குள்ள சனீஸ்வரர், தசரதரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்கிறார்கள். இவரை 9 நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டால் சகல விதமான சனி தோஷங்களும், சிவராத்திரி நாளில் இத்தல ஈசனை வழிபட்டால் நாக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.