Sree Kadampuzha Bhagavathi Temple

335J+J76, National Highway 213, Machingal, Down Hill, Malappuram, Kerala 676505, India
About

Sree Kadampuzha Bhagavathi Temple is a hindu temple located in Malappuram, Kerala. The average rating of this place is 3.90 out of 5 stars based on 8 reviews. The street address of this place is 335J+J76, National Highway 213, Machingal, Down Hill, Malappuram, Kerala 676505, India. It is about 10.66 kilometers away from the Angadipuram railway station.

Photos
FAQs
Where is Sree Kadampuzha Bhagavathi Temple located?
Sree Kadampuzha Bhagavathi Temple is located at 335J+J76, National Highway 213, Machingal, Down Hill, Malappuram, Kerala 676505, India.
What is the nearest railway station from Sree Kadampuzha Bhagavathi Temple?
Angadipuram railway station is the nearest railway station to Sree Kadampuzha Bhagavathi Temple. It is nearly 10.66 kilometers away from it.
What people say about Sree Kadampuzha Bhagavathi Temple

Anand Mk 48 months ago

Nice

Thirugnanam Chinnappan 18 months ago

( "ச்யாமாம்பரீஹி இலாப சேகரயுதாம் ஆபத்தபர்ணாம்கதாம் குஞ்சாஹார லசல்பயோதரபராம் அஷ்டாஹியான் பிப்ரதீம் தாடங்காங்கத மேகலா குணரணன் மஞ்சீரிதாம் ப்ராபிதாம் கயிராதீம் வரதாபய துவிதிகராம் தேவிம்த்ரிநேத்ராம் பஜே!"
என, ஆதிசங்கரரால் பாடப்பெற்ற அம்மன் தலம் என்பது இத்தலச்சிறப்பு.

ஶ்ரீ பகவதி தேவி இத்தலத்தில் ஒளியாய் வீற்றிருக்கிறாள்.

(????????சிறப்புக்கள் பல பெற்ற, இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்)

ஏழாம் நூற்றாண்டில், ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட தலமென்பது மற்றுமொரு தலச்சிறப்பு.

ஒரு வரலாற்று நிகழ்வின்படி;
வேடுவப்பெண்ணாக இருந்து
தான் இத்தலம் வந்தருள்வதை
ஒரு தெய்வீக ஒளியின் மூலம் ஆதிசங்கரருக்கு, ஒரு கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில்
பார்வதிதேவி உணரச்செய்த பின்,
அங்கிருந்த சிறு துளையினுள் அந்த தெய்வீக ஒளி சென்றுவிட,
அத்துளையினுள் இருக்கும் இறைவியை
அங்கேய இருக்க முடிவுசெய்து, அம்பாளின் வெப்ப கடுமையை குறைத்திட
நரசிம்மம் மற்றும் சுதர்சன சக்கரத்தை
நிறுவி பல்வேறு பூஜைகள் செய்து பின்னர், அத்துளையின் மேல் 'பூ மூடல்' பூஜையை செய்து, அம்பாளை அங்கேயே இருக்கச்செய்து வழிபட்டார் என தலவரலாறு கூறுகிறது.

இத்தலத்தில்
நான்கு அடி நீளமும், மூன்று அடி அகலமும்
கொண்ட கருங்கல்லால் ஆன கருவறையின் நடுவில், ஐந்து அங்குலச் சுற்றளவு கொண்ட துளை இருக்கிறது. அந்த துளையில் பகவதிதேவி வீற்றிருந்து அருள்பரிந்து வருகிறாள்.

(இக்கோவில் இருக்கும் அம்பிகையை,
காலை வேளையில் வித்யா துர்கா (சரஸ்வதி) வடிவிலும்,
மதிய வேளையில்
வன துர்கா (துர்க்கை) வடிவிலும்,
மாலை வேளையில்
ஆதி துர்கா (லக்ஷ்மி)
வடிவிலும் வழிபாடு செய்யப்படுவதும், இத்தலத்திற்கு
வரும் பக்தர்கள்
கல்வி, வீரம், செல்வம் என்று தங்கள் தேவைக்கேற்ப, அந்த வழிபாடு வேளைகளை தேர்வு செய்து வழிபட்டுச்செல்வது தல விசேஷம்)

இக்கோவிலை
நிறுவிய ஆதிசங்கரர், வழிபாட்டுக்கென்று சில வழிமுறைகள் உருவாக்கி கொடுத்துள்ளார்.
அந்த வழிமுறையை பின்பற்றியே இன்றளவும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றனவாம்.

( ஆதிசங்கரர், ஆலயம் நிறுவிய கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திர நாளில், அனைத்து செல்வ வளங்களும் கிடைப்பெற நடைபெறும் 'பூ மூடல்' வழிபாட்டிற்கு, பக்தர்கள் களந்துகொள்ள வரும் 2045- ஆம் ஆண்டுவரை முன் பதிவு செய்துள்ளனராம்)

பக்தர்கள்
தங்களது
நட்சத்திர நாளில் கலந்துகொள்ளும்
முட்டறுக்கல் (தேங்காய் உடைத்தல்) நிகழ்வும்,, கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில் நடைபெறும் 'பூ மூடல்' நிகழ்வும், இத்திலத்தில் பிரசித்தி பெற்ற விசேஷ காலமாகும்).

????????ஓம் சக்தி பராசக்தி:

???????????????? *ஜெய்ஹிந்த்*